தனியார் நிறுவன ஊழியரின் லேப்டாப்பை வழிப்பறி செய்த வாலிபர் கைது


தனியார் நிறுவன ஊழியரின் லேப்டாப்பை வழிப்பறி செய்த வாலிபர் கைது
x

வேலூரில் தனியார் நிறுவன ஊழியரின் லேப் டாப்பை வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர்

சென்னை பள்ளிக்கரணை ராஜேஷ்நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவர் சென்னையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சுரேஷ் நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாயக்கனேரியில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு வேலூர் வழியாக சென்னைக்கு பஸ்சில் செல்ல வந்தார்.

வேலூர் பழைய பஸ்நிலையத்துக்கு நேற்று காலை 6.30 மணியளவில் வந்த அவர் அங்கிருந்து மக்கான் பகுதியில் உள்ள ஆடுதொட்டி தற்காலிக பஸ்நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் திடீரென சுரேஷ் கையில் வைத்திருந்த பையை (டிராவல்பேக்) பறித்து விட்டு தப்பியோடினார். அதில் லேப்டாப், துணி உள்ளிட்டவை இருந்தன.

இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பள்ளிகொண்டாவை சேர்ந்த சபரேஷ் (30) என்று தெரிய வந்தது.

இதற்கிடையே மாலையில் வேலூர் பழைய பஸ்நிலையம் அருகே சுற்றித்திரிந்த சபரேசை, போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து சுரேஷ் லேப்டாப் உள்பட 4 லேப்டாப்கள் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story