சாராயம் பதுக்கி வைத்த பெண் கைது
பிரம்மதேசம் அருகே சாராயம் பதுக்கி வைத்த பெண் கைது
விழுப்புரம்
பிரம்மதேசம்
பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லாளம் கிராமத்தில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் நல்லாளம் கிராமத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நல்லாளம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தானம் என்பவரின் மனைவி அருள் அவரது வீட்டின் பின்புறம் 20 லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story