அலுமினிய கம்பிகளை திருடிய பெண் கைது


அலுமினிய கம்பிகளை திருடிய பெண் கைது
x

அலுமினிய கம்பிகளை திருடிய பெண் கைது

மதுரை

மதுரை முத்துப்பட்டி மெயின் ரோடு, டி.வி.எஸ். நகர் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் (பகிர்மானம்) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாத்திற்குள் மர்ம நபர்கள் அத்துமீறி சென்று அலுமினிய கம்பி திருடி செல்வது தொடர் கதையாக இருந்து வந்தது. இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளர் தனமூர்த்தி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் அலுமினிய கம்பிகளை ஒரு பெண் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. உடனே போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்திய போது அவனியாபுரம் ஜீவா நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (வயது 57) என்று தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 12 கிலோ அலுமினிய கம்பிகளை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story