ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் தங்கக்காசு திருடிய பெண் கைது


ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் தங்கக்காசு திருடிய பெண் கைது
x

ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் தங்கக்காசு திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

லால்குடியை அடுத்த டால்மியாபுரத்தை சேர்ந்தவர் நித்திய நிர்மலா (வயது 58). ஆசிரியையான இவர் சம்பவத்தன்று திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் உள்ள நகைக்கடையில் 2½ கிராம் தங்கக்காசை வாங்கிக்கொண்டு தில்லை நகர் 10-வது கிராசில் உள்ள மருத்துவமனைக்கு தனது மகன் கிளாடிவின் சிபி, தாய் சரோஜா ஆகியோருடன் பஸ்சில் சென்றார்.

அப்போது பஸ்சில் பயணித்த ஒரு பெண், நித்திய நிர்மலா பையில் வைத்திருந்த தங்கக்காசை திருடினார். இதை பார்த்த கிளாடிவின் சிபி, அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். ேபாலீசார் நடத்திய விசாரணையில் அவர், திருவானைக்காவல் அருள் முருகன் கார்டனை சேர்ந்த செல்வி(47) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story