ஓடும் பஸ்சில் பணம் திருடிய பெண் கைது


ஓடும் பஸ்சில் பணம் திருடிய பெண் கைது
x

ஓடும் பஸ்சில் பணம் திருடிய பெண் கைது

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே உள்ள கழுகூரணி பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் மனைவி சாந்தி (வயது 50). இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் படித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக நேற்று காலை அரசு பஸ்சில் ராமநாதபுரம் வந்தார். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த பையில் ரூ.1000-த்துடன் இருந்த மணி பர்சை அருகில் இருந்த பெண் நைசாக திருடினார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்க முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாந்தி அந்த பெண்ணை பிடிக்குமாறு கூச்சலிட்டார். பஸ்சில் இருந்தவர்கள் அந்த பெண்ணை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது அவர் சேலம் காக்காதோப்பு பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பன் மனைவி துளசி(30) என்பது தெரியவந்தது. இவர் மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story