அடையாள அட்டை வழங்கிய வழக்கில் பெண் கைது


அடையாள அட்டை வழங்கிய வழக்கில் பெண் கைது
x

போலி சான்றிதழ் மூலம் அடையாள அட்டை வழங்கிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கடந்த ஏப்ரல் மாதம், மாற்றுத்திறனாளிகள் அல்லாத நபர்கள் போலி மருத்துவ சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனர். அவர்கள் மீதும், போலி மருத்துவ சான்றிதழ் வாங்கி கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக குடியாத்தம் தாலுகா லட்சுமணாபுரத்தை சேர்ந்த நவநீதம் என்ற பெண்ணையும், போலி சான்றிதழ் மூலம் பலருக்கு தேசிய அடையாள அட்டை வாங்கி கொடுத்த வேலப்பாடியை சேர்ந்த தினகரன், காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த ஆவின் பாஸ்கர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கே.வி.குப்பம் தாலுகா மாளியப்பட்டை சேர்ந்த மூர்த்தி மனைவி கலா (வயது 38) போலி மருத்துவ சான்றிதழ் மூலம் அடையாள அட்டை பெற்றதும், மேலும் அவர் போலி சான்றிதழ் மூலம் பலருக்கு தேசிய அடையாள அட்டை பெற்று கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


Next Story