கணவர் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை
கணவர் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்
ஆத்தூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர், கூலித்தொழிலாளி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனால் இவரது மனைவி மல்லிகா மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆத்தூர் தெற்கு காடு பகுதிக்கு மல்லிகாவை அவரது தாய் சரோஜா தாயத்து கட்ட அழைத்து வந்தார். இருப்பினும் கணவர் இறந்த சோகத்தில் இருந்த மல்லிகா, தெற்கு காடு பகுதியில் கதிர்வேல் பூசாரியின் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். உடனடியாக ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story