விஷம் தின்று பெண் தற்கொலை


விஷம் தின்று பெண் தற்கொலை
x

விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி தேவி(வயது 31). இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரனும், தேவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில மாதங்களாக தேவி மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து பசையை(விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தேவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவி உயிரிழந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் தேவியின் அண்ணன் டோன்டோ சுனில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story