விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயா (வயது 50). இவர் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ஜெயா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 9-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்துள்ளார். பின்னர் அருகே இருந்தவர்கள் ஜெயாவை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயா நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story