விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே வளையங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குருலட்சுமி (வயது 25). இவரும் இவரது கணவர் செல்வராசும் ஒரு தனியார் குழுவில் கடன் வாங்கி பணம் கட்டி வந்துள்ளனர். செல்வராசுக்கு வேலை இல்லாததால் கடனை கட்ட முடியாத நிலை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென குருலட்சுமி விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிசிக்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story