விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடும்பாறை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

மயிலாடும்பாறை அருகே உள்ள மூலக்கடை கிராமத்தை சேர்ந்தவர் சூரியகலா (வயது 29). இவரது கணவர் இறந்து விட்டார். இதனால் சூரியகலா தனது 2 பெண் குழந்தைகளுடன் மூலக்கடையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சூரியகலா அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகி வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த சூரியகலா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சூரியகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story