விஷம் குடித்து பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ரெயில்வே காலனியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருடைய மனைவி ஜெயமாலினி (வயது 44). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், அதற்காக ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். அப்படி இருந்தும் உடல்நிலை சரியாகவில்லையாம். இதனால் மனம் உடைந்த ஜெயமாலினி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயமாலினி இறந்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire