விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழவரப்பங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தனசங்கு. இவரது மனைவி தீர்த்தவள்ளி(வயது 55). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சைகள் பெற்றபோதும், வலி குறையவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்றுவலியை தாங்க முடியாமல் மனமுடைந்த அவர் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story