விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

தேவதானப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்த அய்யாசாமி மனைவி கணபதி (வயது 50). இவரது மகன் கருத்தராஜாவின் மனைவி சுகன்யா. இவரது தந்தை சிங்கத்திற்கும் (60), கணபதிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று சிங்கம், கணபதி வீட்டுக்கு சென்று அவரை அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கணபதி நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக சிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Next Story