விஷம் குடித்து பெண் தற்கொலை
கொரடாச்சேரி அருகே குழந்தை இல்லாத விரக்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே குழந்தை இல்லாத விரக்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்தார்
கொரடாச்சேரி அருகே கண்கொடுத்த வணிதத்தை அடுத்த காவாலகுடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி வேதலட்சுமி (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் வேதலட்சுமி விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது வேதலட்சுமி பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.
போலீசார் விசாரணை
இதை பார்த்த உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.