விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை
சிவகங்கை
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே உள்ள கல்லங்காலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவர் சமையல் வேலை செய்து வந்தார். இவர் சமையல் வேலைக்காக பொள்ளாச்சிக்கு சென்ற சமயத்தில் இவருடைய மனைவி அழகு லெட்சுமி(வயது 37) மற்றும் 17 வயது மகனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு மகன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீடு திரும்பிய ராஜரெத்தினம் தனது மனைவி அழகு லெட்சுமி விஷம் குடித்து மயங்கி கிடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவரை உடனடியாக பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்பு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story