விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள குஞ்சுவெளி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மனைவி பஞ்சவர்ணம்(வயது 45). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பஞ்சவர்ணத்திற்கு வயிற்றுவலி அதிகமாகவே வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனைக்கண்ட உறவினர்கள் பஞ்சவர்ணத்தை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள குணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பஞ்சவர்ணத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் பரமசிவம் அளித்த புகாரின்பேரில், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story