விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

சமயபுரம்:

மண்ணச்சநல்லூரை அடுத்த திருவெள்ளறை அருகே உள்ள காளவாய்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மேகலா(வயது 34). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மேகலா சிறுநீரக பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகாததால், விரக்தி அடைந்த நிலையில் இருந்த அவர் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.

இதைத்தொடர்ந்து அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story