விஷம் குடித்து பெண் தற்கொலை
ரிஷிவந்தியம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி காமாட்சி (வயது 32). இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த காமாட்சி விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story