விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் விஷம் குடித்து பெண் தற்கொலை மது அருந்த தாலியை கணவர் பறித்து சென்றதால் விரக்தி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 46). இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்துவதற்கு பணம் கேட்டு அவரது மனைவி நளினி மற்றும் தாயை தொந்தரவு செய்து வந்ததோடு மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடிக்க பணம் இல்லாததால் அவரது மனைவி நளினியிடம் தோடு, தாலியை கேட்டு தர மறுத்ததால் மிரட்டி பறித்துக் கொண்டார். இதனால் விரக்தி அடைந்த நளினி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் நளினியை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திாியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நளினியின் மகன் பாரதி வளவன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story