விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தை சேர்ந்த தங்க மாடத்தி மகள் சந்தன செல்வி (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முத்துப்பாண்டி தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சந்தன செல்வி கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு வந்துள்ளார். சந்தன செல்வி பெயரில் உள்ள நகைகளை வங்கியில் இருந்து திருப்பி வைக்க வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.இதுகுறித்து தங்க மாடத்தி அளித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story