பெண் தீக்குளித்து தற்கொலை


பெண் தீக்குளித்து தற்கொலை
x

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

நொய்யல்,

தீக்குளிப்பு

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே புங்கோடி குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). இவரது மனைவி ராஜேஸ்வரி (52). இவர்களுக்கு திவ்யா, கமலி என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்துள்ளது.இதனால் உடல்நிலை பாதித்து வந்ததால் அவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியில்லை. இதனால் ராஜேஸ்வரி மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து ராஜேஸ்வரி தனக்கு தானே ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார்.

தற்கொலை

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ராஜேஸ்வரியின் கணவர் மாரிமுத்து கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story