பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை

தாயில்பட்டி அருகே உள்ள சல்வார்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 25). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராஜாத்தி (23). பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு லட்சுமி பிரியா (4), தங்கராஜ் (2) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பட்டாசு ஆலையில் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த ராஜாத்தி திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

ேபாலீசார் விசாரணை

இதுகுறித்து ராஜாத்தியின் தந்தை பால்ராஜ் வெம்பக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாத்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story