தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

ராஜபாளையத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் தெற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் காளிகுரு. இவருடைய மனைவி சித்ரா (வயது 28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். காளிகுரு வெளியூரில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். சித்ரா அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்தார். கணவன் வெளியூரில் வேலை பார்ப்பதாலும், தானும் வேலைக்கு சென்று விடுவதாலும் குழந்தைகளை சரியாக கவனிக்க முடியவில்லை என சித்ரா மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது பள்ளி விடுமுறை என்பதால் திருப்பூரில் உள்ள சித்ராவின் பெற்ேறார் வீட்டில் குழந்தைகளை கொண்டு போய் விட்டுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story