தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

அரக்கோணம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை

அரக்கோணத்தை அடுத்த செல்வமந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 30). விவசாயி. இவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி (22) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதன் பின் வினோத்குமார் விவசாய நிலத்திற்கு சென்று விட்ட நிலையில் புவனேஸ்வரி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் வினோத் குமாருக்கும், அரக்கோணம் தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ் விசாரனை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story