பெண் தீக்குளித்து தற்கொலை
பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தரகம்பட்டி அருகே உள்ள இடையப்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் குழந்தையப்பன் (வயது 32). இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் குழந்தையப்பன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த வனிதா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். வனிதாவிற்கும் ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் வனிதாவிற்கும், குழந்தையப்பனுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு வனிதா தனது குழந்தையுடன் அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று வனிதா மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.இதில் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து பாலவிடுதி ேபாலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வனிதாவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் ஷோபாவும் விசாரணை நடத்தினார்.