பெண் தீக்குளித்து தற்கொலை


பெண் தீக்குளித்து தற்கொலை
x

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அறப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 34). இவரது மனைவி மீனாட்சி (28). கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் கோபித்துக் கொண்டு மீனாட்சி திண்டிவனம் ஏகாம்பரம் பிள்ளை தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மீனாட்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இது குறித்த புகாரின் பேரில் மீனாட்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரோசணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story