பெண் தீக்குளித்து தற்கொலை


பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள குடியிருப்புவிளையை சேர்ந்த வனராஜ் மனைவி லோகலட்சுமி (வயது 37). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் லோகலட்சுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை தூத்துக்குடி தனியார் மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் முழுமையாக குணம் அடையவில்லை.

இந்நிலையில் கடந்த கடந்த 30-ந் தேதி வீட்டில் திடீரென்று லோகலட்சுமி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் முரளிதரன் விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story