பெண் தீக்குளித்து தற்கொலை
பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் காதப்பாறையை சேர்ந்தவர் தமிழரசி (வயது 41). இவர் கடந்த 4 ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் இருந்து வந்த தமிழரசி சம்பவத்தன்று மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் தீக்காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலையில் ்சிகிச்சை பலனின்றி தமிழரசி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story