விஷ மாத்திரையை தின்று பெண் தற்கொலை
விஷ மாத்திரையை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் அருகே உள்ள புலியூர் செல்வ நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி சித்ரா (வயது 33). இவர் கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சித்ரா சம்பவத்தன்று விஷ மாத்திரையை தின்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story