தந்தை இறந்த சோகத்தில் பெண் தற்கொலை
தந்தை இறந்த சோகத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தந்தை இறந்த சோகத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தந்தை இறப்பு
மதுரை உலகனேரி பகுதியை சேர்ந்தவர் முருகன். அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவர் தன்னுடைய 2 மகள்களுடன் வசித்து வந்தார். அதில் மூத்த மகள் அமுதா(24), இளைய மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே நடத்த விபத்தில் முருகனும் படுகாயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரையும், தன்னுடைய சகோதரியையும் அமுதா தான் உடன் இருந்து கவனித்து வந்தார். இந்தநிலையில் சிகிச்சையில் இருந்த முருகன், நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்கொலை
இதுகுறித்து தகவல் அறிந்த முருகனின் மகள் அமுதா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
தந்தை இறந்த சோகத்தில் இருந்த அமுதா, மனநலம் பாதிக்கப்பட்ட தங்கையை எப்படி காப்பாற்றுவது என நினைத்து இந்த சோக முடிவை எடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை, காப்பகத்தில் ஒப்படைக்க தேவையான பணிகள் நடந்து வருகிறது.