மகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை


மகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
x

மகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்

மதுரை

திருமங்கலம்

மகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

திருமங்கலம் அருகே புங்கங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மலர்கொடி (வயது 50). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு மகள் இறந்து விட்டார்.

அந்த மன வருத்தத்தில் இருந்த மலர்கொடி நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து செல்லப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தை சேர்ந்த கார்மேகம் மனைவி மீனா(35). இவர் விஷம் குடித்து ஆபத்தான நிலைமையில் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இது குறித்து காடுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மீனாவிற்கு 3 குழந்தைகள் உள்ளன.


Next Story