ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
x

ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலைதிருச்சி கோட்டை ரெயில் நிலையத்திற்கும் முத்தரசநல்லூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள ரெயில் தண்டவாள பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். கம்பரசம்பேட்டை ரெயில்வே கேட் அருகே வந்தபோது அந்த பெண் திடீரென அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அப்பகுதியினர் திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story