தீக்குளித்து பெண் தற்கொலை


தீக்குளித்து பெண் தற்கொலை
x

தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலியை சேர்ந்தவர் வடிவேல் (வயது76). இவரது மூத்த மகள் சாந்தி (48). மாற்றுத்திறனாளி. வடிவேலின் மனைவி 2 மாதத்திற்கு முன்னர் இறந்து விட்ட நிலையில் மன வேதனையில் இருந்த சாந்தி இருமுறை கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சாந்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி வடிவேல் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story