திருமணமான 4 ஆண்டுகளில் பெண் சாவு
திருக்காட்டுப்பள்ளி அருகே திருமணமான 4 ஆண்டுகளில் பெண் உயிரிழந்தார்.
திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் குரு பாரதி . இவருடைய மனைவி சுந்தரி (24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. சுந்தரியின் கணவர் குரு பாரதி சவுதி அரேபியாவில் பணி செய்து வந்தார். இந்த நிலையில் சவுதி அரேபியா சென்று விட்டு குரு பாரதி கடந்த 9-ந் தேதி ஊர் திரும்பினார். நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு, தூங்க சென்று விட்டார். இரவு 12.30மணி அளவில் பார்த்த போது சுந்தரி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததை கண்டு திடுக்கிட்ட குருபாரதி தனது மனைவியை திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுந்தரி இறந்து விட்டதாக கூறினர். சுந்தரிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.