எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பெண் சாவு
பற்பசை என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பெண் பரிதாபமாக இறந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள ரெகுநாதபுரம் கீழவலசை பகுதியை சேர்ந்தவர் தெய்வச்சிலை. இவருடைய மனைவி மைதிலி (வயது 69). இவர் காலையில் எழுந்து பல் துலக்க சென்றபோது டூத் பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்ட்டை வைத்து பல் துலக்கினார். இதில் லேசான மயக்க நிலை ஏற்படவே அவர் நெல்லையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு உடல்நிலை கவலைக்கிடமாகவே நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மைதிலி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மருமகன் ஸ்ரீராம் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story