டி.கல்லுப்பட்டி அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில் பெண் பலி; 4 பேர் படுகாயம்
டி.கல்லுப்பட்டி அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் கவிழ்ந்தது
மதுரை புதுமாகாளிப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் நாககுமரன்(வயது 28). நாககுமரனுக்கு பழக்கமான திருநகரை சேர்ந்த மனோஜ்குமார் தங்கையின் மகன் காதணி விழாவுக்காக, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியத்திற்கு குடும்பத்துடன் சென்றனர். அங்கு விழாவை முடித்துவிட்டு மீண்டும் மதுரைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை, மனோஜ்குமார் ஓட்டினார்.
இந்த கார், திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் டி.கல்லுப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே வரும்போது, காரின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதனால் கார் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த நாககுமரன், மனோஜ்குமார், சதானந்தம், ஆதித்யா, சுதா ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது.
விசாரணை
இவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதா சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.