குடும்பத்தகராறில் விஷம் குடித்த பெண் சாவு


குடும்பத்தகராறில் விஷம் குடித்த பெண் சாவு
x

குடும்பத்தகராறில் விஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி கலைஞர் காலனியை சேர்ந்தவர் பாண்டிகுமார். இவருடைய மனைவி சாந்தி (வயது 32). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் குடும்பத்தகராறில் கடந்த 5-ந் தேதி சாந்தி விஷம் குடித்தார். இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சாந்தி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story