மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு கணவன் கண் எதிரே நிகழ்ந்த பரிதாபம்
விழுப்புரம்
விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மனைவி சசிகலா(வயது 35). இவர்கள் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் விக்கிரவாண்டிக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து அனிச்சம்பாளையத்துக்கு புறப்பட்டனர். சென்னை- கும்பகோணம் சாலையில் மேல்பாதி சாலை அருகே சென்றபோது அங்குள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கி ஏறியதில் பின்னால் உட்கார்ந்திருந்த சசிகலா எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தனது கண்முன்னே மனைவி சசிகலா இறந்ததை கண்டு ரமேஷ் கதறி அழுதார். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.