கழிவறையில் தவறி விழுந்த பெண் சாவு


கழிவறையில் தவறி விழுந்த பெண் சாவு
x

கழிவறையில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் வாசுகி தெருவை சேர்ந்தவர் சமயன். கூலித்தொழிலாளி. இவரது மகள் சத்யா (வயது 31). மனநலம் குன்றியவர். நேற்று முன்தினம் இரவு சத்யா, வீட்டில் கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சத்யாவின் பெற்றோர், கழிவறை கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, சத்யா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனே அவரை ஆம்புலன்சில் ஏற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவாச்சூர் அருகே சத்யா உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story