ஸ்கூட்டர் மீது வாகனம் மோதி பெண் பலி
மோகனூர்
கரூர் மாவட்டம், ஆண்டாள் கோவில் அருகே உள்ள கோவிந்தம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 70). கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி வசந்தமணி என்பவருடன் கடந்த மாதம் 16-ந் தேதி ஸ்கூட்டரில் கரூரிலிருந்து நாமக்கல் செல்வதற்காக மோகனூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது வாங்கல் பிரிவு ரோடு அரசு மதுபான கடை அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்ததில்வசந்தாமணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றிஇறந்தார்.
இது குறித்து அவரது கணவர் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.