பாம்பு கடித்து பெண் சாவு


பாம்பு கடித்து பெண் சாவு
x

பாம்பு கடித்து பெண் உயிரிழந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவரின் மனைவி சரஸ்வதி(வயது 36). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் சம்பவத்தன்று வயல் வேலையை முடித்துவிட்டு அவரது தோட்டம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story