கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு


கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு
x

கிணற்றில் தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள முத்துக்குமராபுரத்தை சேர்ந்தவர் சோலைராஜ் (வயது 55). இவருடைய சகோதரி தங்கமாரி (48). இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இவரை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் இவர் தனது 3 மகள்களுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் 3 மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில் தங்கமாரிக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற தங்கமாரி வீட்டின் அருகே உள்ள பட்டாசுஆலைக்கு சொந்தமான கிணற்றில் இறந்து கிடந்தார். இவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சோலைராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Next Story