2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்


2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்
x

ராமநத்தம் அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் பிடித்தாா்.

கடலூர்

ராமநத்தம்:

ராமநத்தத்தை அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் மணிகண்டன்(வயது 36). இவருக்கும் மீனா(26) என்பவருக்கும் திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. செல்லபெருமாள்(5), சர்வேஷ்(1½) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன்- மனைவி இருவரும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் மணிகண்டன் எழுந்து பார்த்தபோது மீனாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மனைவியை காணாததால் இதுகுறித்து ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே ஊரை சேர்ந்த திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான லாரி டிரைவர் பரமசிவம் என்பவருக்கும் மீனாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த நிலையில் மீனா 2 குழந்தைகளையும் தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story