2 குழந்தைகளை தவிக்க விட்டு காதலனுடன் பெண் ஓட்டம்


2 குழந்தைகளை தவிக்க விட்டு காதலனுடன் பெண் ஓட்டம்
x

2 குழந்தைகளை தவிக்க விட்டு காதலனுடன் பெண் ஓட்டம் பிடித்தார்.

திருச்சி

திருச்சி பெரியமிளகு பாறை பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு முன் அந்த பெண் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். அந்த காதல் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்துள்ளது. இதுபற்றி அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவரவே அவர், தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தனது காதலனுடன் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கணவர், குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில், அந்த பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை தேடி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story