தாதகாப்பட்டியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தாதகாப்பட்டியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி, சண்முக நகர் ராஜமாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி கலைவாணி (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கலைவாணிக்கு தீராத வயிற்று வலி இருந்தது வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல இடங்களில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் குணமாகாத நிலையில் மன உளைச்சலுடன் காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் வீட்டில் தனது அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story