குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆம்பூர் ஆயிஷா பி நகர் பகுதியை சேர்ந்தவர் நூர் அகமது (வயது 38). இவரது மனைவி பாபிதா பேகம் (35). கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் ஷூ கம்பெனி தொழிலாளர்களாவர். இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாபிதா பேகம் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக பாபிதா பேகம் இறந்து விட்டார்.

பாபிதா பேகம் சாவுக்கு, நூர் அகமதுதான் காரணம் எனவே அவரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போலீசில் புகார் அளித்து உடலையும் வாங்க மறுத்தனர். பின்னர் இது சம்பந்தமாக ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூர் அகமதுவை கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story