கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை அருகே தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் இறந்துவிட்டார். இதனால் பேச்சியம்மாள் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire