பட்டாசு வெடித்ததில் காயமடைந்த பெண் சாவு


பட்டாசு வெடித்ததில் காயமடைந்த பெண் சாவு
x

பட்டாசு வெடித்ததில் காயமடைந்த பெண் இறந்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடி பகுதியில் கடந்த 25-ந்் தேதி பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் வாணாபாடியை சேர்ந்த கோபி (வயது46) மற்றும் அவரது மனைவி தீபா (40) ஆகியோர் தீக்காயம் அடைந்து, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து வாணாபாடி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கோபி கடந்த 1-ந் தேதி இறந்தார். தீபா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் நேற்று பரிதாபமாக இறந்தார். கணவன்- மனைவி இருவருமே இறந்துவிட்ட சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story