அரசு பஸ் மோதி பெண் படுகாயம்


அரசு பஸ் மோதி பெண் படுகாயம்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் அரசு பஸ் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரிய சூண்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி கனகம்மாள் (வயது 65). இந்த நிலையில் தங்கவேலுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் கூடலூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தங்கவேலை அழைத்துக் கொண்டு கனகம்மாள் நேற்று வந்தார். அப்போது சாலையை கடந்து செல்வதற்காக 2 பேரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளுடன் கோவை செல்லும் அரசு பஸ் வந்தது. பஸ் வருவதை கண்ட தங்கவேல் சாலையோரம் நின்றிருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக கனகம்மாள் சாலையை கடந்த போது அரசு பஸ் அவர் மீது மோதியது.

இதில் கணவர் கண் எதிரே தூக்கி வீசப்பட்டு கனகம்மாள் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனிடையே படுகாயம் அடைந்த கனகம்மாள் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story